புதிய பேழை

ஆண்டவர் இட்ட ஆணையை மோசே எடுத்துரைத்தார்; நீங்கள் தலைமுறைதோறும் அழியாமல் காப்பதற்காக அதில் இரண்டு படி அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக, நான் உங்களை எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தபோது, பாலைநிலத்தில் உங்களுக்குத் தந்த உணவை இதன்மூலம் அவர்கள் கண்டுகொள்வர்.

விடுதலைப் பயணம் 16-32.

ஆண்டவர் பாலைநிலத்தில் இஸ்ரேல் மக்களின் பசியைப் போக்க வானிலிருந்து பொழிந்த உணவு மன்னா.  அதை இரண்டு படி எடுத்து உடன் படிக்கை பேழையில் வைத்தனர். அந்த உடன்படிக்கை பேழை ஆண்டவர் சொன்னபடி அலங்கரிக்கப்பட்டது. அந்த மன்னா இருந்த பேழையை மக்கள் வழிபட்டனர். அது சென்ற இடங்களிலெல்லாம் ஆசீர்வாதத்தை கொடுத்தது. அந்த பேழையின் மீது ஆண்டவரின் மாட்சி எப்போதும் தங்கியது. 

பாவிகளாகிய நம் ஆன்ம பசி போக்க வானிலிருந்து இறங்கி   வந்த  உணவு இயேசு.  அவரை பத்து திங்கள் தாங்கிய அன்னை மரியாள் நம் புதிய உடன்படிக்கை பேழை .  அந்த அன்னையிடம் தூய ஆவியார் நிழலிட்டு இருந்தார்.  அந்த அன்னைக்கு மரியாதை செலுத்தும்  நாம் அனைவரும் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்படுவோம்.   அன்னையிடம் வேண்டுதல் செய்யும் போது,  ஆண்டவரிடம் அவர்  நமக்காக பரிந்து பேசுவார்.

அன்னை மரியாள் அருள் நிறைந்தவர். பரிசுத்தத்தின் இருப்பிடம் . நமக்கு கொடுக்கப்பட்ட விடிவெள்ளி .  ஆண்டவரால்  விண்ணகத்துக்கு எடுத்து கொள்ளபட்டவர்.  . அந்த புதிய உடன்படிக்கை பேழையாகிய அன்னை மரியாள் இருக்கும் இடங்களும் ஆசீர்வதிக்கப்படும்  என்பதில் சிறுதும் ஐயமில்லை.  

எந்த ஒரு சந்தேமும் இன்றி நம்பிக்கையோடு ஜெபிக்கப்படும் ஜெபத்துக்கு நிச்சயமாக நல்ல பதில் கிடைக்கும்.  நம்பிக்கையுள்ள ஜெபம் ஒரு நாளும் வீணாக போகாது.  அன்னை மரியாவை ஜெபமாலை என்னும் ரோஜா மலர்களால் அழங்கரிப்போம் வாருங்கள். 

 

அருள் நிறைந்த மரியே வாழ்க.  ஆண்டவர் உம்முடனே . பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே புனித மரியே இறைவனின் தாயே பாவிகளாக எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டி கொள்ளும் ஆமென். அம்மா எங்களுக்காக இறைவனிடம் வெண்டிகொள்ளும். ஆமென்.

இயேசுவுக்கு புகழ். மரியேவாழ்க.

Add new comment

10 + 1 =