பாவத்திற்கு கிடைக்கும் சம்பளம் என்ன? பார்ப்போமா!

பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு - உரோமையர் 6:23. பாவத்திற்கு கிடைக்கும் சம்பளம் சாவு என்றால் நாம் முதல் பாவம் செய்த போதே இறந்திருக்க வேண்டும்.  ஆனால் நாம் இறக்கவில்லையே. ஏன்? கடவுள் இரக்கமுள்ளவர். நம்மீது அத்தனை அன்பு வைத்துள்ளார். அதனால் தான் நம் பாவங்களை அவர் ஏற்றுக்கொண்டு நமக்காக சிலுவை சாவை ஏற்றுக்கொண்டார். நம்மை தம் சாவின் மூலம் மீட்டுள்ளார்.

இப்போது நாம் அவருடைய பிள்ளைகள். அரச குருத்துவ திருக்கூட்டம். கடவுளுக்கு சொந்தமானவர்கள். நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கும் வாழ்வு வாழ வேண்டும் . அதை தான் ஆண்டவர் விரும்புகிறார். பாவம் செய்யும் முன் ஆண்டவருடைய பாடுகளை, அவருடைய தாயினும் மேலான அன்பை, நினைப்போம். நிலை வாழ்வை வாழ்வோம். எப்படி சவுல் பவுல் ஆன பிறகு முற்றிலும் கடவுளுக்காக வாழ்ந்தாரோ அது போல வாழ்வோம். நிறைய இறைவார்த்தைகளை படிப்போம். நம் வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் இயேசுவை பிரதிபலிப்போம். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.

ஜெபம்: ஆண்டவரே உமக்கு நன்றி. உம் அன்புக்கு நன்றி. உம் இரக்கத்துக்கு நன்றி. எங்கள் பாவங்களை மன்னியும். இனிமேல் பாவம் செய்யாதபடி உம் பிள்ளையாக வாழ தூய ஆவியின் துணையை தாரும். ஆமென்.

Add new comment

3 + 13 =