பரிவினால் உலகத்துக்கு உண்டான அதிசயங்கள பத்தி தெரிஞ்சுக்கலாமா?

இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவரிடத்தில் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார் - மத்தேயு15-32. ஆண்டவர் இயேசு மக்கள் மீது பரிவு கொண்டார்.  

மூன்று நாட்களாக அந்த மக்கள் அவருடனேயே இருந்தார்கள். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தார்கள். இயேசு அவர்களை குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு அந்த மக்கள்  வியந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

இயேசு அவர்களை அதோடு விட்டு விட நினைக்கவில்லை.  அவர்களுக்கு உணவளிக்க விரும்புகிறார். ஆண்டவரிடம் வந்த எவரும் வெறும் கையேடு திரும்ப சென்றதில்லை. மனதுக்கும், உடலுக்கும், ஆன்மாவுக்கும் தேவையானதை தந்து தான் அனுப்புவார். அவர்  கொடை வள்ளல். வற்றாத ஜீவ ஊற்று. தன்னை உணவாக அளித்த உயர்ந்தவர்.

ஜெபம்: வார்த்தையாக வாழ்வில் வந்தவரே, உணவாக உடலை தந்தவரே, ஆவியாக எங்களில் கலந்தவரே, அப்பா உமக்கு நன்றி. இந்த அதிகாலையில் எங்களையும், எங்கள் உறவுகளையும்,  எங்களை சுற்றி இருப்போரையும் உமது அரும் கொடைகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். ஆமென்.

Add new comment

4 + 12 =