நெஞ்சின் நெருக்கம்

நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் - தீத்து 3:5. நாம் அவரது அருளால் மட்டுமே அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார். நம்முடைய அரும்செயல்களால் நாம் மீட்படையவில்லை.

இதுவே உண்மையானது. கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்கள் நற்செயல்களைச் செய்யக் கருத்தாய் இருக்கும்படி  வலியுறுத்தவேண்டும் என்பதே அவருடைய  விருப்பம். இந் நற்செயல்களைச் செய்வதே முறையானது இவை மக்களுக்குப் பயன்படும்.அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்துள்ளார்.

மடத்தனமான விவாதங்கள், மூதாதையர் பட்டியல்கள் பற்றிய ஆய்வுகள், போட்டி மனப்பான்மை, திருச்சட்டத்தைப் பற்றிய சண்டைகள் ஆகியவற்றை விலக்குவோம். இவை பயனற்றவை, வீணானவை. ஆண்டவர் இயேசு இறந்தார் ஆனால் மூன்றாம் நாளில் சாவை வென்று உயித்தெழுந்தார். ஆண்டவர் இயேசுவின் சிலுவை சாவு வரை சீடர்கள் அனைவரும் கோழைகளாக, அறிவிலிகளாக தான் இருந்தார்கள்.   அவர்களும் தங்கள் கோழைத்தனம் அறியாமை போன்றவற்றில் இறந்து கிறிஸ்துவோடு தூய ஆவியின் புது படைப்பாக மாறிய பிறகுதான் புதுமைகள் செய்ய ஆரம்பித்தார்கள். நாமும் நன்மைகள் பல செய்வோம். நாம் பெற்றுக்கொண்ட மீட்பை தக்க வைத்து கொள்வோம். 

ஜெபம்: ஆண்டவரே உமக்கு நன்றி. நாங்கள் பெற்றுக்கொண்ட மீட்பை தக்க வைத்து கொண்டு  நிலை வாழ்வை பெற்று உமது வரங்களால் அலங்கரிக்கப்பட்டு அன்பு தாழ்ச்சி சாந்தம் உள்ள பிள்ளைகளாய் வாழ வரம் தாரும். துணை புரியும். ஆமென்.

Add new comment

3 + 2 =