நீ எங்கே இருக்கிறாய்?

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார் - தொடக்க நூல் 3:9. ஆதாமும் ஏவாளும் விலக்கபட்ட பழத்தை சாப்பிட்டு பாவம் செய்தார்கள். அதனால் கடவுளின் முன்வர பயந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்துகொண்டார்கள். அது ஆண்டவருக்கு தெரியும்.இருப்பினும் அவர் ஆதாமை கூப்பிட்டு நீ எங்கே இருக்கின்றாய் என்று கேட்கிறார்.

ஆதாம் தன் பாவத்தைத் உணர்ந்து ஆண்டவரிடம் செல்கிறார். ஆண்டவர் அவர்களுக்கு ஆடைகளை  உடுக்க வைத்து தண்டனை கொடுத்து ஏதேனை விட்டு வெளியே அனுப்புகிறார். ஆண்டவர்க்கு எல்லாம் தெரிந்து இருந்தாலும் அவர் நாம் எங்கு இருக்கிறோம், எந்த நிலையில் இருக்கிறோம், எப்படி இருக்கிறோம் என்று நம் வாயால் சொல்ல விரும்புகிறார்.

என் பிள்ளை 2 நாளாக என் பாதத்தில் அமரவில்லையே. இந்த ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு வரவில்லையே. என்னிடம் பேசவில்லையே என்று நம் வாயிலிருந்து அறிய விரும்புகிறார்.அவர் விசாரிக்கிற கடவுளாய் இருக்கிறார். நாம் பாவம் செய்தாலும், நோயிலிருந்தாலும், பணத்தேவையில் இருந்தாலும், எந்த நிலையில் இருக்கிறோம்  என்று சொன்னால் அவர் அதற்கு வழி காட்டுவார்.

ஜெபம்: ஆண்டவரே, எங்களை தேடி அலைகின்றவரே உமக்கு நன்றி. எங்களை விசாரித்து அறிந்து எங்கள் பாவங்களை மன்னித்து, நோய்களை போக்கி, கவலைகளை அக்களிப்பாக மாற்றி, குறைவுகளை நிறைவாக்கி, மிகுந்த சமாதானத்தை தருபவரே உமக்கு நன்றி. எங்களை உம்மை விட்டு பிரியவிடத்தியும். எங்கும் எப்பொழுதும் எங்களோடு இருந்தருளும். ஆமென்.

Add new comment

8 + 2 =