நாம் யாருக்கு உரியவர்களாக வாழந்து கொண்டிருக்கிறோம்!!

இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று கூறினார் - மத்தேயு 22:20-21.

பரிசேயர்கள் இயேசுவிடம் குற்றம் கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரி செலுத்துவது முறையாக யாருக்கு செலுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். இயேசு காசை கொண்டுவரச் சொல்லி அந்த காசில் என்ன உருவம் இருக்கிறது என்கிறார். அவர்கள் சீசருடைய முத்திரையும் உருவமும் இருக்கிறது என்றார்கள்.  உடனே இயேசு அப்படி என்றால் சீசருடையதை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்கிறார்.  

எனவே நாம் முத்திரை தாங்கிய பணத்தை  அரசாங்கத்துக்கு வரியாக கொடுப்போம், ஆண்டவருடைய சாயலாக படைக்கப்பட்ட நம்மை ஆண்டவருக்கு கொடுப்போம். ஆம் அவர் பணத்தையோ, பொருளையோ கேட்கவில்லை. நம் ஒவ்வொருவருடைய ஆன்மாவையும் கேட்கிறார்.

நம்மால் முடிந்த சிறு காணிக்கை மூலமாக திருஅவையின் தேவைகளையும் அது சார்ந்த அனைத்து ஸ்தாபனங்களின் தேவைகளையும் சந்திப்போம்.

ஜெபம்: ஆண்டவரே உம்மை போற்றுகிறோம். உம்மை புகழ்கிறோம். எங்கள் வாழ்வில் அரசாங்க வரிகளை ஒழுங்காக கொடுத்து, உமது சாயலாக படைக்கப்பட்ட நாங்கள் உம் விழுமியங்கள் படி வாழ்ந்து  உமக்கு உரிய எங்களையே உம்மிடம் தரும் மனதைதர ஆவியானவர் மூலம் எங்களை வழி நடத்தும். ஆமென்.

Add new comment

17 + 0 =