நம்பி ஒப்படைத்தவருக்கு நடந்த அதிசயம்

அடியேனுக்கு நீர் காட்டிய பேரன்பு முழுவதற்கும் நம்பிக்கைக்குரிய தன்மை முழுவதற்கும் நான் தகுதியற்றவன். நான் இந்த யோர்தானைக் கடந்து சென்றபோது என்னிடமிருந்தது ஒரு கோல் மட்டுமே. இப்போதோ, இரண்டு பரிவாரங்கள் உடையவன் ஆனேன் - தொடக்க நூல் 32:10. யாக்கோபு தன் தாயின் சொல்லை கேட்டு ஏசாயாக நடித்து தன் தந்தை ஈசாக்கிட்டயிருந்து ஆசீர்வாதத்தை பெற்று கொண்டார். எனவே ஏசாயு தன்னை கொண்ணுடுவாரோ என்று பயந்து ஊரைவிட்டு தன் மாமன் வீட்டுக்கு போகிறார். 

அங்கு அவர் போகும்போது அவருக்கு என்று  இருந்தது  ஒரு கம்பு மட்டுமே. ஆனால் ஆண்டவர் போகும் வழியில் பேசுகிறார். நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்  என்கிறார். உன் சன்னதியை பெறுக செய்வேன் என்று ஆபிரகாம் கிட்ட சொன்னதை உன் மூலம் நிறைவேற்றுவேன் என்கிறார். 

யாக்கோபு தன் தாய்மாமன் லாபான் வீட்டிலே கடுமையாக உழைக்கிறார். லாபானோ இவரை ஒவ்வொரு முறையும் ஏமாற்றுகிறார். அங்கிருந்த 20 ஆண்டுகளில் 10 முறை அவரது ஊதியத்தை மாற்றி அவரை கொடுமைப்படுத்துகிறார். ஆனால் ஆண்டவர் என்ன செய்தார் தெரியுமா. ஒவ்வொரு முறை ஊதியத்தை மாற்றும் போதும் யாக்கோபையே கடவுள் ஆசீர்வதிக்கிறார். அதனால்  யாக்கோபுவின் செல்வம் பெருகிற்று.  மனைவி  மக்கள் ஆடு மாடு என 2 பரிவாளங்களோடு திரும்பி வருகிறார். 

ஆம் சகோதரமே நம் கையில் ஒன்றுமே இல்லாமல் இருந்தாலும் கடவுளை நம்பி நம்மை முற்றிலும் ஒப்படைத்தால் நம்மை நிறைவாக அமுக்கி குலுக்கி சரிந்து விழுமட்டும் ஆசீர்வதிப்பார்.

ஜெபம்: உம்மிடம் ஒப்படைக்கிறோம். இந்த அதிகாலையில் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். எங்கள் கையின் உழைப்பின் பலன் முழுவதுமாக எங்களுக்கு கிடைக்க செய்யும். நன்றி ஆண்டவரே நன்றி. ஆமென். 

Add new comment

12 + 2 =