நமக்கு பலம் தருவது யாருனு பார்க்கலாமா?

ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவார். கழுகுகள்போல் இறக்கைகள் விரித்து உயரே செல்வர்; ஓடுவர், களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார் - எசாயா 40:31. ஆண்டவர் மீது முழு நம்பிக்கைவைத்தால் அவர்களுக்கு அவர் புதுபலம் தருவார். அவர்கள் எப்பொழுதும் மகிச்சியாயிருப்பர்கள். என்ன நேர்ந்தாலும் சோர்ந்து போகமாட்டார்கள். அவரே களைத்தவனுக்குப் பலம் தருகிறார், வலிமையும் சக்தியும் அற்றவர்க்கு அவற்றை ஊட்டுகிறார்.

ஆண்டவர் தான் முடிவில்லாத கடவுள்: பூமியின் எல்லைகளைப் படைத்தவர் அவரே, அவர் சோர்ந்து போபவர் அல்ல. அவர் களைப்படைபவர் அல்ல. அவருடைய ஞானமோ மனிதனின் புத்திக்கு எட்டாதது. அவர் நம்மீது கண் வைத்து ஆலோசனை சொல்கிற கடவுள். 

அவர் நல்ல ஆயனாக நம்மை வழி நடத்தி செல்கிறார். நாம் பயப்பட தேவையில்லை. அவர் சதாகாலமும் நம்முடனே இருந்து நம்மை காக்கின்ற இறைவன். ஆலோசனை தரும் இறைவன். நித்திய பிதா. எனவே நாம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து புதுபலம் பெற்று சோர்வடையாமல் வாழ முயற்சிப்போம்.

ஜெபம்: ஆண்டவரே உம்மையே நம்பி எங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் உம்மிடம் ஓப்படைக்கிறோம். எங்களுக்கு புது பலம் தாரும். ஓடி ஜெயிக்க வரம் தாரும். எங்கள் உரிமை சொத்தாக உம்மை இன்னும் அதிகமாக பற்றி கொள்ள வரம் தாரும். ஆமென்.

Add new comment

3 + 0 =