துன்பங்களை எதிர்கொள்வோம்! அனால் எப்படி?

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர் - திருப்பாடல்கள் 138:7. ஆண்டவர் நம்மோடு இருந்து நம்மை காக்கின்ற   கடவுள். சில நேரங்களில் நமக்கே வியப்பாக இருக்கும். ஒரு பெரிய துன்பம் நடந்திருக்கும். ஆனால் நாம் எப்படி அதை தாண்டி வந்தோம் என்று  நமக்கு ஆச்சரியமாக  இருக்கும்.  

திகையாதே. கலங்காதே நான் உன்னோடு இருந்து உனக்கு செய்யும் காரியங்கள் பெரியனவாயிருக்கும் என்று சொல்லி ஆண்டவர் துன்பத்தின் நேரங்களில் நம்மோடு இருக்கிறார். மோயிசன் காலத்திற்கு பிறகு யோசுவா இஸ்ரேல் மக்களை வழி நடத்தினார். தாவீதை சாவின் பயத்திலிருந்து பாதுகாத்து உயிரோடு காத்தார். இயேசுவின் சீடர்கள் கூட பயந்து நடுங்கி கொண்டிருந்த சமயத்தில் தூய ஆவியை அனுப்பி அவர்களை வழி நடத்தினார்.

ஜெபம்: ஆண்டவரே உம்மை துதிக்கிறோம். எங்கள் துன்ப நேரத்தில் எங்களுக்கு கோட்டையாக அரணாக இருந்து எங்களை காத்து வழி நடத்துவதற்காக நன்றி.  இன்றைய நாளில் நாங்கள் எந்த கேட்டிலும் விழாதபடி காத்தருளும். ஆமென்.

Add new comment

2 + 0 =