தீர்ப்பு...

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள் - லூக்கா 6:37. ஆண்டவர் நீங்கள் பிறரை குற்றவாளிகள் என சொல்லாதீர்கள். முதலில்  உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பது ஏன் என்று கேட்கிறார்.

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, இவள் பாவம் செய்து விட்டாள் இவளை என்ன செய்வது, கல்லால் எரிந்து கொல்லட்டுமா என்று கேட்கிறார்கள். இயேசு “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டதும் எல்லாரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இயேசு “அம்மா, அவர்கள் எங்கே? நீ குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர்  “இல்லை, ஐயா” என்றார். இயேசு“நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. இனிப் பாவம் செய்யாதீர்” என்றார். நம் குற்றத்தை நாம் நினைத்து பார்த்தல் நாம் பிறரை தீர்ப்புக்கு ஆளாக்க மாட்டோம். 

ஜெபம்: ஆண்டவரே, எங்களை நல்ல தந்தையே எங்களை மன்னியும். நாங்கள் யாரையும் தீர்ப்பிடாது, யாரையும் குற்றப்படுத்தாது வாழும் நல்ல மனதை எங்களுக்கு தாரும். நாங்கள் பலவீனர்கள். உம் ஆவியால் எங்களை நிரப்பி வழி நடத்தும். ஆமென்.

Add new comment

12 + 6 =