தகுதி உள்ளவர்களாக நம்மை மாற்றிக்கொள்வோமா!

உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார் - லூக்கா 7:7. நூற்றுவர் தலைவன் ஆண்டவரிடம் ஆண்டவரே நீர் வர வேண்டாம். நான் அதற்கு தகுதியுள்ளவன் இல்லை. நோயாளியை நீர் பார்க்க கூட வேண்டாம். ஒரு வார்த்தை சொல்லும் என் ஊழியன் குணமடைவார் என்கிறார்.

ஆண்டவர் ஒரு  வார்த்தை சொன்னால் போதும். அது அப்படியே நடக்கும். படைப்புகள் ஒவ்வொன்றையும் உருவாக்கும் போதும் அவர் சொல்லச் சொல்ல அப்படியே உருவானது. ஒளி தோன்றுக என்றார் ஒளி உண்டாயிற்று. ஒளி பிளம்புகள் தோன்றுக என்றார். சூரியனும் சந்திரனும் தோன்றின. அவர் சொல்ல சொல்ல ஒவ்வொன்றும் உருவானது. திமிர்வாதக்காரனை பார்த்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்கிறார். அவர் நடக்கிறார். உன் விசுவாசம் உன்னை குணமாக்கிற்று என்கிறார். நோய் குணமாகிறது. அவர் வார்த்தையை அனுப்பி கிருபையை தருகின்ற கடவுள்.  

கடவுளின் வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் ஊடுருவுகிறது;   உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.

ஜெபம்: வார்த்தையான கடவுளே, எங்களோடு ஒவ்வொரு நாளும் பேசுபவரே உமக்கு நன்றி. ஆண்டவரே எங்களுடைய வாழ்வில், கஷ்டங்களில், சந்தோசங்களில், நோயில், அரோக்கியத்தில், தோல்விகளில், வெற்றிகளில், இளமை, முதுமை எல்லா நேரங்களிலும் உம் வார்த்தையை அனுப்பும். நாங்கள் வாழ வேண்டிய வழியை காட்டும்.  உம் வார்த்தை எங்களுக்கு வல்லமை அளிக்கட்டும். ஆமென்.

Add new comment

7 + 7 =