Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சொன்னது யார்?
நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது - திருப்பாடல்கள் 63:8. ஆண்டவர் நமக்கு துணையாய் அவரது வலது கரமும் ஓங்கிய புயமும் நம்மை தாங்குகிறது. அவருடைய இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து அமர்ந்து இருப்போம். அஞ்ச வேண்டாம்.இருளும் புயலும் நம்மை ஒன்றும் செய்யாது. துன்பம், தோல்வி, கடன், நோய் வருத்தங்களால் நாம் சூழப்பட்டு அலை கடலில் அமிழ்ந்து போவது போன்ற நிகழ்வுகள் நம்மை சூழ்ந்து இருந்தாலும் பயப்படாதீர்கள். பயப்படாதே உன்னோடு நான் இருக்கிறேன் என்று ஆண்டவர் சொல்கிறார்.
தீயின் நடுவில் நாம் இருந்தாலும் தானியேலை தீயின் நடுவிலிருந்து விடுவித்த அதே கடவுள் இன்றும் நம்மோடு இருக்கிறார். கடல் போன்ற சூழலின் நடுவில் நாம் மாட்டி கொண்டாலும் செங்கடலை பிளந்து பாதை அமைத்த அதே கடவுள் இன்றும் நம்மோடு இருக்கிறார். மலை போன்ற தடை வந்து நம்மை தடுத்தாலும் எரிக்க்கோ மதிலை உடைத்து வழி விட்ட அதே கடவுள் இன்றும் நம்மோடு இருக்கிறார். அவருடைய வலது கரம் அதிசயங்களை செய்யும். நம்மை பிடித்து கொள்ளும். நமக்கு புது பலன் தரும். அவன் என்னையே பற்றி கொண்ட படியால் ஆபத்து காலத்தில் நான் அவனோடு இருந்து அவனை விடுவிப்பேன் என்று ஆண்டவர் சொல்கிறார்.
ஜெபம்: ஆண்டவரே உமது நீதியின் வலது கரத்தால் எங்களை தாங்குபவரே உமக்கு நன்றி. ஆண்டவரே உலகம் தராத சமாதானத்தை எங்களுக்கு தாரும். உமது சிறகுகளின் நிழலில் நித்தமும் எங்களை மூடி மறைத்து கொள்ளும். தீங்கணுகா வண்ணம் பாதுகாத்துக் கொள்ளும். ஆமென்.
Add new comment