சுமையை இறக்கிட்டா போதுமா!

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார் - மத்தேயு 11:29- 30. ஆண்டவர் கனிவும் மனத்தாழ்மையும உள்ளவர். இரக்கம்  காட்டுபவர்.  இனிமையானவர். நுகம் என்பது காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரக்கட்டை. அது அதிக சுமை உள்ளதாக இருக்கும். 'அது போன்ற என் நுகத்தை உங்கள் மீது  ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்று கொள்ளுங்கள் என்றார்.  அவருடைய சுமை  எளியதாயிருக்கும். நம்மை அழுத்தாது என்கிறார்.   

இங்கு இயேசு  நுகம் என்று சொல்வது அவருடைய கட்டளைகளை தான். அவருடைய கட்டளைகள் நமக்கு நுகம் போல சுமையாக இருந்தாலும் அவை இரக்கமுள்ள ஆண்டவருடைய துணையோடு நாம் ஏற்றுகொள்ளும்போது மிக எளிதாக இருக்கும் என்கிறார். நம் உள்ளத்திற்கும் அமைதியையும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தரும். நமக்கு ஒரு இளைப்பாறுதளியும் தரும். 

ஜெபம்: ஆண்டவரே எங்களோடு இரும். ஆண்டவரே உம் கட்டளைகளை பின்பற்றி உம்மிலே நாங்கள் இளைப்பாறுதல் அடைய அருள் தாரும். எங்கள் குடும்பத்தில், சமூகத்தில். பிறருடைய  சுமைகளை இறக்கி வைத்து, பிறருக்கு பயன்படும் பிள்ளைகளாக நாங்கள் வாழ உமது அன்பின் அரவணைப்பில் எங்களை வைத்து காத்தருளும். ஆமென்.

Add new comment

18 + 1 =