சின்னது ஆனால் இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் - மத்தேயு 18:13. நல்ல ஆயன் தன் மந்தையிலுள்ள ஒரு ஆடு காணாமல் போய் விட்டால் மற்ற ஆடுகளை எல்லாம் விட்டு விட்டு அந்த ஒரு ஆட்டை தேடி காடு மலை எல்லாம் அலைவார். முள்ளு கல்லு எதுவும் பார்க்காமல் நடப்பார். இருட்டாயிருந்தால் கூட வேறு விலங்குகள் அதை கொன்று விட கூடாதே என்ற எண்ணத்தில் தேடி அலைந்து திரிந்து கண்டு பிடிப்பார். 

கண்டு பிடித்ததும் அந்த ஆட்டை கட்டி பிடித்து கொள்வார். அதை தோளில் சுமந்து கொண்டு வருவார். கீழே விடமாட்டார். அவ்வளவு சந்தோசப்படுவார். அதே போல் தான், வழி தவறி சென்ற ஒரு ஆன்மாவை இறைவன் தேடுகிறார். அவர் கவலைப்படுகிறார். அந்த ஆன்மா அவருக்கு கிடைத்ததும் மிகுந்த சந்தோசமடைகிறார். 

நம் ஆண்டவர் நமக்கு நல்ல ஆயனாக இருக்கிறார். நாம் அவரை விட்டு தூரப்போனால்  நம்மை குறித்து அதிக கவலை படுகிற கடவுளாய் இருக்கிறார். அவர் நம்மை கண்டுபிடித்து தோளில் சுமந்து விட்டார் என்றால் நமக்கும் பயமில்லை. அவருக்கும் அவ்வளவு சந்தோசம். நம்மை எதுவும் அனுகவிடமாட்டார்.

ஜெபம்: நல்ல ஆயனாகிய எங்கள் தந்தையே உம்மை போற்றுகிறோம். நீர் எங்களை தேடி அலைகிற கடவுள். அப்பா நாங்கள் என்றும் உம் தோளில் உட்கார்ந்திருக்கும் ஆடாக, உம் அன்புக்கு உரிய பிள்ளைகளாக வாழ அருள்தாரும். எந்த ஒன்றும் உம் அன்பிலிருந்து எங்களை பிரிக்காது காத்தருளும்.  ஆமென்.

Add new comment

4 + 9 =