கோணம் வேறு

மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார் - 1 சாமுவேல் 16:7. சாமுவேல் சவுல் ராஜாவுக்கு பதிலாக வேறு ஒரு ராஜாவை அபிசேகம் செய்வதற்காக ஆண்டவரால் அனுப்பபட்டார். ஈசாய் தம் ஏழு புதல்வரை சாமுவேல் முன்பாகக் கடந்துபோகச்செய்தார். ஆண்டவர் அவர்களில் யாரையும் தேர்ந்து கொள்ளவில்லை.

பின் சாமுவேல் ஈசாயைப் பார்த்து “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, “இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான்” என ஈசாய் சொல்ல , சாமுவேல்  அவனை அழைத்து வா என்றார். சாமுவேல் அவன் சகோதரர் முன்னிலையில் தாவீதை திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. 

ஆண்டவர் மனிதரை போன்று உடல் தோற்றம் அழகு இவற்றை வைத்து நேசிக்கிற இறைவன் இல்லை. உள்ளத்தின் ஆழத்தை பார்க்கின்ற கடவுள். இவனால் இந்த காரியத்தை செய்ய முடியுமா முடியாதா என அறிந்து அவனை தேர்ந்தெடுத்து கடைசி வரை அவனோடு இருக்கின்ற இறைவன். வெற்றிகளை தருகின்ற இறைவன்.  நம்மை வழி நடத்துகின்ற கடவுள். 

ஜெபம்: ஆண்டவரே எங்களின் உள்ளத்தை பார்த்து ஆறுதல் அளிக்கின்ற கடவுளே, எங்களோடு இரும். உம் பிள்ளையாக எங்களை தேர்ந்தெடுத்து சில பொறுப்புகளை எங்களிடம் ஒப்படைத்துள்ளீர்.  நாங்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டவற்றை சரிவர செய்ய தூய ஆவியின் அருள் தாரும். ஆமென்.

Add new comment

5 + 9 =