கீழ்ப்படிதல்! இதுக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா?

ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள் - உரோமையர் 5:19. ஆதாமின் கீழ்படியாமையால் மனுக்குலத்திற்கு பாவம்விளைந்தது. ஆதாமும் தன்னுடைய மாட்சியை இழக்கிறார். ஆண்டவருடைய தோட்டத்திலிருந்து வெளியே துரத்தப்படுகிறார். 

புதிய ஆதாமாகிய இயேசுவின்  கீழ்ப்படிதலால் மனுக்குலத்திற்கு மீட்பு கிடைக்கிறது.  இங்கு கிறிஸ்து  ஒரு பாவமும்  செய்யாதவர். நமக்காக சிலுவை சாவை ஏற்று கீழ்படிகிறார். அனைவரின் பாவத்திற்கும்ம் மன்னிப்பு கிடைக்கிறது.  தூய ஆவியின் கொடைகளை பெறுவதன் மூலம் அருள் வரங்களையும் அடையாளங்களையும் பெறுகிறோம். அன்று ஏவாளின் மீறுதலால் நாம் அருள் வாழ்வை இழந்தோம். இன்று அன்னை மரியாளின் வழியாக கிறிஸ்துவின் மூலம் அருள் வாழ்வை பெற்று கொண்டோம்.

ஜெபம்: ஆண்டவரே எங்கள் தந்தையே உம்மை போற்றுகிறோம் புகழ்கிறோம். எங்களுடைய பாவங்களையும் எங்கள் மீறுதல்களையும்  மன்னியும் தூய ஆவியை எங்கள் மீது அனுப்பி  உமது அருளால் நிரப்பப் பட வேண்டுமென அன்னை மரியாள் வழியாகவும் மன்றாடுகிறோம். ஆமென்.
 

Add new comment

1 + 8 =