கடவுளின் நண்பன்

நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள் - யோவான் 15:14. ஆண்டவர் நம்மை அவருடைய நண்பன் என்று கூறுகிறார். தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என்று தன் உயிரை நமக்காக, நாம் விடுதலை வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக கொடுத்த அன்பு நேசர்.

உலகத்தோடு கொள்ளும் நட்பு சில காலம்தான். பெரும்பாலான நட்புக்கள் நம்மை அழிவுக்கு இட்டுசெல்லும். உண்மையான நட்பு மட்டுமேஉயிரை கொடுக்கும் அளவுக்கு நமக்கு உதவும். ஆண்டவரோடு கொள்கிற நட்பு அழியாதது. நிலைவாழ்வுக்கு நம்மை இட்டுச்செல்லும். சந்தோஷப்படுத்தும். மனதுக்கு அமைதிதரும். ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடந்தால் நாம் அவர் நண்பர்கள் ஆகலாம். 

ஜெபம்: அன்பு ஆண்டவரே உமக்கு நன்றி. மோயிசனோடு பேசியது போல் எங்களோடு பேசும். எங்கள் இனிய நண்பரே எங்களோடு இருந்து நாங்கள் நடக்க வேண்டிய வழியை எங்களுக்கு காட்டும். ஆமென்.

Add new comment

4 + 10 =