ஓ கண்ணீரும் தித்திக்குதே!

இப்போது ஆண்டவர் நம்மைத் தீர்ப்புக்கு ஆளாக்கினால் அது நம்மைத் தண்டித்துத் திருத்துவதற்கே. உலகத்தோடு நாமும் தண்டனைத் தீர்ப்பு அடையாதிருக்கவே இப்படிச் செய்கிறார் - 1கொரிந்தியர் 11:32 ஆண்டவர் நம்மீது தாயினும் மேலான அன்பு வைத்துள்ளார். நாம் அவரை தேடும் பொழுது சில நேரங்களில் அதிகமான துன்பங்களை அனுபவிப்போம்.

அது நம்மை தண்டித்து திருத்துவதற்கு தான். நம் குற்றங்களிலிருந்து விடுபட்டு விடுதலை வாழ்வு வாழ்வதற்கே. முற்றிலும் பரிசுத்தம் ஆவதற்கே. வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத் தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர். ஆம் நாம் தண்டனை தீர்ப்பு அடைந்து பாதாளத்திற்கு செல்லாமல் ஆண்டவருடைய பேரின்ப வீட்டில் பங்கு பெறவே இவ்வாறு செய்கிறார். ஒருவரும் அழிந்து போகாமல் எல்லாரும் நிலை வாழ்வு பெறுவதே அவருடைய விருப்பம். கடவுள் மிக நல்லவர். பேரன்பு மிக்கவர். அவரது அன்பு வானத்தை விட உயர்ந்தது.

ஜெபம்: ஆண்டவரே, எங்கள் நல்ல ஆயனே, எங்கள் மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி. எங்கள் உடலும் ஆன்மாவும் உமக்கே சொந்தம். அதை கரைபடுத்தாது உமக்கு ஏற்ற வாழ்வு வாழவும், எங்கள் வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்தும் எங்களை நிலை வாழ்வுக்கு இட்டு செல்வதற்கான படிகல்கள் என்பதை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

14 + 0 =