எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்ள நாம் செய்யவேண்டியது

இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது - 1 கொரிந்தியர் 15:10. அன்பு சகோதரனேசகோதரியே நாம் எல்லோரும் பாவம் செய்தவர்கள். பெரிய பாவமோ, சிறிய பாவமோ, மறைவான பாவமோ, வெளிப்படையான பாவமோ ஏதாவது செய்து இருப்போம். ஆண்டவர் ஒருவரைத் தவிர பாவம் இல்லாதவர் யாருமே கிடையாது. அவரது பேரிரக்கத்தினால் நம்மை மீட்டுள்ளார் என்பது தான் உண்மை.

திருத்தூதர் பவுல் சவுலாக இருக்கும் போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தார். கிறிஸ்தவர்களை துன்புறுத்தினார். ஆண்டவரே நீ துன்புறுத்தும் கிறிஸ்து என பதில் சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டவர். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்ற அவர் மீது ஆண்டவர் வைத்த அருளால் அவர் பல மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் அளவுக்கு தன் வாழ்க்கையை மாற்றி கொண்டார். பல திருமுகங்கள் எழுதும் அளவுக்கு ஆவியின் வரத்தை பெற்றார். துதியினால் சிறை கதவுகள் திறக்கும் அளவுக்கு ஆண்டவரை துதிக்கும் அருளை பெற்றார்.

ஆண்டவர் நம் பாவங்களை மன்னித்து நம்மை தன் பிள்ளைகளாக ஏற்று கொள்பவர். நம்மை பற்றி சிந்திக்காமல் எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைப்போம்.  நம்முடைய பாவ பழக்கங்களிருந்து வெளிவருவோம். அடுத்த நிமிடம் என்ன நடந்தாலும் அவர் பார்த்து கொள்வார் என நம்புவோம் நிச்சயமாக. அவர் நம்மை வழி நடத்துவார். 

செபம்: ஆண்டவரே எங்களை முற்றிலுமாக நாங்கள் இருக்கின்ற நிலையிலேயே உம்மிடம் ஒப்படைக்கிறோம். எங்களை உம் தூய ஆவியால் நிரப்பும். எங்களுடைய வாழ்வு பிறருக்கு ஒரு நற்செய்தியாக இருக்க அருள்தாரும், ஆசீர்வதியும். ஆமென்.

Add new comment

1 + 2 =