என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்

அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார் - 1 கொரிந்தியர் 11:25. திருப்பலியில்  நாம் அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறவர்களாய் இருக்கிறோம். அந்த நேரத்தில் ஆண்டவர் உண்மையாகவே நமக்குள் அப்ப வடிவில் வருகிறார்.

எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார். எனவே நாம்  ஒவ்வொருவரும் சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும். இந்த வேளையில் நம்மை உடல் வலிமை பெற்றவர்களாகவும் வல்லமை உடையவர்களாகவும் ஆண்டவர் மாற்றுகிறார். அதற்கு நம்மை தகுதியுடையவர் ஆக்கி பிறகு நற்கருணை விருந்தில் அமர்வோம். 

ஜெபம்: ஆண்டவரே, உணவாக வந்த உன்னதரே உமக்கு நன்றி. ஆண்டவரே உமது வருகைக்கு தயாரானவர்களாய், உமது  விண்ணக விருந்துக்கு தகுதியானவர்களாய் வாழ்ந்து உம்மை ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்வில் அனுபவித்து உணர வரம் தாரும். ஆமென்.

Add new comment

10 + 7 =