என்ன செய்ய வேண்டும்

சீடர்களிடம் வந்து, “இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார் - மத்தேயு 26:25. ஆண்டவர் இயேசு எப்பொழுதும் விழிப்பாயிறுங்கள் என்கிறார். நாம் உலக இன்பத்தில், தொலைகாட்சியில், கைபேசியில், வம்பு பேசுவதில் என பல தேவையில்லாத காரியங்களில் மூழ்கி உறங்கி கொண்டிருக்கிறோம்.  எனவே நாம் விழித்து எழுவோம்.  ஆண்டவருடைய வருகை மிக அருகில் உள்ளது. காலம் நெருங்கி விட்டது.

மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது அவர் வருவார் என நமக்கு தெரியாது. அந்நேரம் எப்போது வரும் என தெரியாது. உறக்கம் கலைந்து உற்சாகம் கொள்வோம். ஞானம் நிறைந்த கன்னியர் போல ஆயத்தமான வாழ்வு வாழ்வோம். மறு வாழ்வுக்கு ஏற்றவர்களாகுவோம்.  இறை வார்த்தையை ஒரு நாளுக்கு ஒருமுறையேனும் மனதில் பதியும் வண்ணம் படிப்போம். அதன்படி வாழ்வோம்.  ஆண்டவர் இயேசுவின்  வருகையை  தந்தையை தவிர யாரும் அறிய மாட்டார்கள்.  அந்த நாளையும் நேரத்தையும் அவர் மட்டுமே அறிவார். இதுவே ஏற்ற நேரம். இன்றே இப்பொழுதே ஆண்டவரை தேடுவோம்.

ஜெபம்: ஆண்டவரே எங்கள்  தந்தையே, நாங்கள் மீண்டும் மீண்டும் உம்மை சிலுவை சாவுக்கு ஒப்புகொடுக்காதபடி விழித்திருந்து உம் பாதம் அமர அருள் தாரும். எங்கள் ஆவியும் உடலும் ஊக்கமுள்ளதாக சோர்வடையாது, நல்ல ஓட்டத்தை ஓடி உம் ஜீவ கிரீடத்தை பெற்று கொள்ள அருள் தாரும். ஆமென்.

Add new comment

1 + 10 =