உழைப்பின் உன்னதம்

“உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம் - தெசலோனிக்கர் 3:10. நம்மில்  சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என திருத்தூதர் பவுல் சொல்கிறார்.

இஸ்ரேல் மக்களுக்கு பாலை நிலத்தில் மன்னா உணவாக கிடைத்த போது அவர்களுடைய கரங்களில் நேராக கொண்டு போய் கொடுக்கப்படவில்லை. மன்னா நிலத்தில் மீது பொழிந்தது .  ஆண்டவர் இட்ட கட்டளையாவது: உங்களில் ஒவ்வொருவனும் தான் உண்ணும் அளவுக்கு இதினின்று சேகரித்துக் கொள்வானாக. அதாவது தலைக்கு இரண்டு படி வீதம் அவரவர் கூடாரத்திலுள்ள ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

இஸ்ரயேல் மக்களும் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள். ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, சேகரித்துக் கொண்டனர். அந்த மன்னாவை அவர்கள் சேகரித்து தான் உண்டனர். நாமும் சோம்பேறியாக இருக்காமல் உழைத்து உண்போம். வீட்டில் இருப்பவர்கள் கவலைப்படவேண்டாம். வீட்டு வேலைகள் செய்வது பிள்ளைகளை கவனிப்பது மற்ற பணிவிடைகள் செய்வதன் மூலம் அவர்களும் உழைக்கிறார்கள்.

செபம்: ஆண்டவரே எங்கள் உழைப்பின் பயன் வீணாய் போகாதபடி எங்கள் கைகளில் கிடைக்க அருள் புரியும். வேலை இல்லாதவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்க செய்யும்.  எங்கள் வேலைகளை சரிவர செய்ய தேவையான ஞானத்தை எங்களுக்கு தாரும், ஆசீர்வதியும். ஆமென்.

Add new comment

16 + 3 =