உம் அன்பால்

உன் தந்தையின் இறைவனே உனக்குத் துணையிருப்பார்; எல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்; மேலே வானத்தினின்று வரும் ஆசியாலும் கீழே ஆழத்தினின்று வரும் ஆசியாலும் கொங்கைகளுக்கும் கருப்பைகளுக்கும் உரிய ஆசியாலும் அவர் உனக்கு ஆசி வழங்குவார்.

தொடக்க நூல் 49-25

இது யாக்கோபு யோசேப்புக்கு சொன்ன ஆசீர்வாதமான வார்த்தை. ஆண்டவர் யோசேப்புடன்  இருந்தார் . அவரை  நிறைவாக ஆசீர்வதித்தார்  ஆண்டவர் ஆசீர்வதிக்கும் கடவுள்.  மேலே வானத்திலுள்ள ஆசீர்வாதத்தாலும் கீழே பூமியிலுள்ள ஆசீர்வாதத்தாலும்   மகப்பேறு என்னும்  ஆசீர்வாதத்தாலும் நம்மை  ஆசீர்வதிப்பார்.

அவர் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார்.  விண்ணக,  மண்ணக ஆசீர்வாதங்களை யும், நோயற்ற வாழ்வையும், நிறைவான சமாதானத்தையும் கொடுக்கும் கடவுள்.

 

ஆண்டவரே,. உம் ஆவியின் வரங்களை எங்களுக்கு தாரும். எங்களுக்கு எல்லா ஆசீர்வாதங்களை தாரும். . உம் அன்பால் எம்மை நிரப்பும்.   உம் கரங்களுக்குள் ஓடி சமாதான வாழ்வு வாழ செய்யும்.  ஆமென்

Add new comment

2 + 8 =