உதவியாச்சு! ஆனா பலன் என்னவா இருக்கும்?

நீ செய்துள்ள அனைத்திற்கும் ஆண்டவர் உனக்குத் தகுந்த பலன் அளிப்பார். இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவருடைய இறக்கைகளின் அரவணைப்பை நீ தேடி வந்திருக்கிறாய். அவர் உனக்கு முழு நிறைவான பலனை அருள்வார்” என்றார் - ரூத்து 2-12. ஆண்டவர் நம்முடைய ஒவ்வொரு செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். நாம் அமர்வதையும் நிற்பதையும் நடப்பதையும் கூட கவனிக்கிறார். அவருடைய கண்கள் நம்மை பார்த்தபடியே இருக்கின்றன.

தோபித்து பசியுற்றோருக்கு உணவும் ஆடையற்றோருக்கு ஆடையும் அளித்து வந்தார்.  இறந்த யாருடைய சடலமாவது நினிவே நகர மதில்களுக்கு வெளியே எறியப்பட்டிருக்கக் கண்டால், அதை எடுத்து அடக்கம் செய்துவந்தார். ஏழைகளையும் கைம்பெண்களையும் ஆதரித்து உதவி செய்துவந்தார். இன்னும் பல நன்மைகள் செய்து வந்தார். அப்படிப்பட்ட அவர் தன் மனைவியையும் மகனையும் தவிர எல்லாவற்றையும் இழந்து கண் பார்வையற்றவர் ஆகிறார்.  

ஆனால் ஆண்டவர்  இரபேலை வானதூதர் அனுப்பி அவர் குடும்பத்துக்கு உதவுகிறார். தோபித்துவின் மகன் தோபியாவுக்கு திருமணம் நடக்கிறது. அவருடைய மருமகள் சாராவிடமிருந்த தீய ஆவி அவரை விட்டு விலகி ஓட அவர் நலமடைகிறார். தோபித்து மீண்டும் பார்வை பெறுகிறார். 

நம் உள் உணர்வுகளையும் ஆய்ந்து அறிந்திருக்கிறார்.  எனவே நாம் செய்கின்ற அனைத்துக்கும் அவர் பலன் தருவார். அவருடைய இறக்கைகளின் கீழ் அடைக்கலம் தேடி வருவோர் ஒருநாளும் அழிந்து போனதில்லை. அவர் நாம் செய்த நற்செயல்கள் அனைத்தையும் நினைத்து நமக்கு நிறைவான பலனைத் தருவார்.

ஜெபம்: ஆண்டவரே எங்களை பார்த்து கொண்டிருக்கிற இயேசுவே உம்மை போற்றுகிறோம். நாங்கள் எங்கள் வாழ்வில் நண்மையானதை செய்து உமது ஆசீரையும் அரவணைப்பையும் இன்னும் அதிகமாக பெற வரம் தாரும். ஆமென். 

Add new comment

1 + 3 =