உணர்த்தும் அன்பு

கடவுள், கனவில் தோன்றி, அவனை நோக்கி, “நீ நேரிய இதயத்தோடு அப்படிச் செய்தாயென்று அறிவேன். அதனால்தான் எனக்கு எதிராகப் பாவம் செய்யாத உன்னைக் காப்பாற்றி, அவளைத் தொடவிடவில்லை - தொடக்க நூல் 20.6-3. ஆண்டவர் நேர்மையானவர்கள் தவறு செய்யவிடமாட்டார். அவர்கள் தவறு செய்ய போகிறார்கள் என்ற உடனே அவர்களை எச்சரிப்பார். ஆபிரகாம் கெராரில் தங்கினார். அங்கு அவருடைய மனைவி சாராயை சகோதரி என சொல்லுகிறார். அதனால்  கெரார் மன்னனாகிய அபிமெலக்கு  சாராள் மீது ஆசைப்பட்டு ஆளனுப்பி அவரை அழைத்துவரச்  சொல்கிறார்.

இரவில் ஆண்டவர் அபிமெலக்குக்குக் கனவில் தோன்றி,  நீ அழைத்துவரச் சொன்ன பெண் ஒருவனுக்கு மனைவி, எனவே நீ செய்ய போவது தவறு என எச்சரிக்கிறார். அதற்கு அபிமெலக்கு  ஆபிரகாம் அவளைத் தன் சகோதரி என்றும் அவள் அவனைத் தன் சகோதரன் என்றும் அறிமுகப்படுத்த்யதால் தான் நான் நேரிய இதயத்தோடும் தூய கைகளோடும் இதைச் செய்தேன் என்றார். ஆண்டவர் அபிமெலக்கு நேரிய உள்ளத்தோடு இருந்ததால் அவர் தவறு செய்யும் முன்பே அதை செய்ய விடாது தடுக்கிறார். நமக்கும் பல நேரங்களில் நம்முள் இருக்கும் ஆவியானவர் தவறை சுட்டி காட்டுவதை உணர்ந்து இருக்கிறோம். செய்யவிடாது தடுத்தும் இருக்கிறார்.

ஜெபம்: எங்களிடத்தில் வாசம் செய்யும் ஆண்டவரே, நாங்கள் பாவத்தில்  தடுக்கி விழ  இருக்கும் நேரங்களில் எங்களோடு இருந்து எங்களை தடுத்து நிறுத்துவதற்காக உமக்கு நன்றி. உமது ஆவியை அனுப்பி நாங்கள் தூயவர்களாக வாழ அருள் தாரும். ஆமென்.

Add new comment

1 + 0 =