இவ்வாறு செய்தால் ஜெபம் கேட்கப்படும்

நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் - மத் 5:44. நாம் பிறர் நமக்கு எதிராக தீமை செய்ய நினைத்தால் அவர்களை மன்னித்து அவர்களுக்காக ஜெபிக்கும் போது ஆண்டவர் நம் ஜெபங்களை கேட்டு அவர்களுக்கு விடுதலை தருவார். ஆண்டவரால் எச்சரிக்கப்பட்ட அபிமேலக்கு தவறு செய்யாதபடி சாராவை நேரிய மனதோடு அனுப்பி விடுகிறார்.

ஆபிரகாம் கடவுளிடம் அபிமலேக்கின் குடும்பத்திற்காக ஜெபித்தார். ஆண்டவர் அவருடைய ஜெபத்தை கேட்டு , மலடியாயிருந்த அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை ஆசீர்வதித்து பிள்ளைப்பேறு அளிக்கிறார். யோபு தன் நண்பர்களுக்காக ஜெபித்த போது ஆண்டவர் அவருடைய நண்பர்களை ஆசீர்வதித்ததோடு யோபையும் ஆசீர்வதித்தார். நாமும் நமக்கு தீங்கு செய்வோருக்காகவும் நன்மை செய்வோருக்காகவும் ஜெபிப்போம்.

ஜெபம்: ஆண்டவரே, எங்களுக்கு நன்மை செய்வோரையும், தீமை செய்வோரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். அவர்கள் குடும்பங்களில் நிறைவான மகிழ்ச்சியும் சமாதானமும் இருக்க செய்யும். எல்லோரும் உம் அன்பை சுவைக்க அருள் தாரும். ஆமென்.

Add new comment

1 + 0 =