இப்படித் தேடினால்தான் இது கிடைக்கும்

நீங்களோ மனத்திடன் கொள்ளுங்கள்; தளர்ந்துபோக வேண்டாம், ஏனெனில், உங்கள் செயல்களுக்கேற்ற கைம்மாறு கிடைக்கும் - 2 குறிப்பேடு 15:7. அந்நாள்களில் ஒருவரும் அமைதியாகப் போகவோ வரவோ இயலவில்லை; ஏனெனில் நாடுகளில் குடியிருந்தோர் அனைவரிடையிலும் ஒரே குழப்பமாய் இருந்தது. 

நாடு நாட்டையும், நகர் நகரையும் எதிர்த்து, ஒன்றை ஒன்று நசுக்கின. எனினும், இஸ்ரயேலர் தங்கள் துன்பத்தில் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பினர்; அவ்வாறு அவர்கள் தேடியபொழுது அவரைக் கண்டு கொண்டனர். அவர்கள் தங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும் தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நாடினர். தன் தந்தையும் தானும் நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் மற்றும் ஏனைய பொருள்களையும் கடவுளின் இல்லத்தில் அரசன் ஒப்படைத்தான். 

ஆசா அரசன் பதவி ஏற்ற பதினைந்தாம் ஆண்டிலிருந்து முப்பத்தைந்தாம் ஆண்டுவரை போர் எழவில்லை. ஆர்வத்துடன் ஆண்டவரை நாடிக் கண்டடைந்தனர்; ஆண்டவரும் அவர்களுக்கு எத்திக்கிலும் அமைதி அளித்தார். நாமும் நம் கடவுளை அரைகுறை உள்ளத்தோடு அல்ல. முழு உள்ளத்தோடு நாடுவோம். தளர்ந்து போகாமல் நற்காரியங்கள் செய்ய மனதாய் இருப்போம். நம் செயல்களுக்கேற்ற கைம்மாறு பெறுவோம். 

செபம்: ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்.  நாங்களும் சோர்வுறாதபடி உறுதியாக உம்மை பற்ற்கொள்ளும் மனதை எங்களுக்கு தாரும். நற்காரியங்கள் பல செய்து நல்ல கைம்மாறு பெற உம் துணை வேண்டுகிறோம். அருள்கூறும். ஆமென்.

Add new comment

19 + 0 =