இப்படிக்கு அன்பு

நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்கவேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ள வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார் - தொடக்க நூல் 45:5. யோசேப்பின் சகோதரர்கள் அவன் மீது பொறாமை கொண்டு அவனை விற்று விட்டார்கள்.  ஆனால் ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எகிப்தில் அவரை ஆசீர்வதித்தார். 

பின் நாளில் பஞ்சம் வரப்போவதை முன்கூட்டியே கனவின் மூலம் பார்வோனுக்கு தெரிவித்து, அந்த கனவின் விளக்கத்தையும் யோசேப்பு மூலம் அரசனுக்கு விளங்க வைத்தார். பின்பு பார்வோன் யோசேப்பை தன் அரண்மனையின் பொறுப்பை ஏற்க  செய்கிறார். வளமிக்க ஏழாண்டுகளில் எகிப்து நாட்டில் விளைந்த எல்லா உணவுப் பொருள்களையும் நகர்களில் அவர் சேகரித்து வைத்தார். உலகமெங்கும் கொடும் பஞ்சம் நிலவியது. அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள். பின்னாளில்  அனைத்து உயிர்களையும்  அவர் மூலமாக பஞ்சத்திலிருந்து  காக்கும்பொருட்டே கடவுள் முன்னரே யோசேப்பை எகிப்திற்கு அனுப்பியருளினார். ஆம். ஆண்டவர் நமக்கு அனுமதிக்கும் சில துன்பங்கள் பின்னாளில் ஆசீர்வாதத்தை கொண்டு வரும். அவர் முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை செய்கின்ற கடவுள்.  

ஜெபம்: அன்பு ஆண்டவரே உமக்கு நன்றி. நீர் ஒரு நாளும் தீமையை  அனுமதிக்கமாட்டீர்  நீர் எங்களுக்கு செய்வது எல்லாமே நன்மையாகவே அமையும். நீர் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பிருந்து எங்கள் வாழ்வின் அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து எங்களுக்காக செய்து முடிப்பவர். நன்றி ஆண்டவரே. நன்றி அப்பா.  ஆமென்.

Add new comment

18 + 0 =