இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் பெரும் மகிழ்ச்சியூட்டபட வேண்டிய இடையோர் யார்?

இயேசுவின் பிறப்பின் நற்செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. ஞானிகள் தொடங்கி பல்வேறு நபர்கள் வந்துபார்த்தார்கள். அவர்கள் அனைவருக்கும் வியப்பூட்டும் பிறப்பு இந்த பிறப்பு. ஆனால் லூக்கா நற்செய்தியாளர் இடையர்களுக்கு அது மபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி எனக் குறிப்பிடுகிறார்.

யார் இந்த இடையர்கள்?

சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். இஸ்ரயேல் மக்கள் கானானில் குடிகொண்ட பிறகு, இடையர்கள் வேலை என்பது மிகவும் விரும்பாத வேலையாக மாறியது. ஜோக்கிம் ஜெரமையா சொல்கிறார், “இடையர்கள் ஒவ்வொரு நாளும் இழிவாகக் கருதப்பட்டார்கள்.” 

மிஸ்னா என்பது யூதர்களின் வாய்வழி சட்டங்களைக் கொண்டது. அதில்  இடையர்களைப் பற்றிய சிறுமைப்படுத்தப்படும் சொற்கூறுகளைப் பதிவுசெய்துள்ளது. ஒரு இடத்தில் அவர்களை தகுதியற்றவர்களாகவும்,  மற்றொரு இடத்தில் இடையர்கள் பாதாளத்தில் விழுந்துகிடந்தால் அவர்களைக் காப்பாற்றும் கட்டாயமில்லை எனவும் குறிப்பிடுகிறது. 

ஒரு இடையரிடமிருந்து பாலோ, காம்பளியோ வாங்குவது மறுக்கப்பட்டது. காரணம் அது திருடியதாக இருக்கும் என்னும் முன்சார்பு எண்ணம்தான். மேலும் இயேசுவின் காலத்தில் வரிதண்டுவோருக்கும், பாவிகளுக்கும் இணையான நிலையிலேயே இடையர்கள் பார்க்கப்படுகிறார்கள் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உலகம் இப்படிப்பார்த்த மனிதர்களுக்குதான் இயேசுவின் பிறப்பு மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக இருந்தது.

நாம் கிறிஸ்து பிறப்பிற்கு தயாரிக்கும்போது, இன்றைய சூழலில் நம்மிடையே வாழும் இடையர்கள் யார்? யாருக்கு மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி கொடுக்கப்படவேண்டும் என சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பயணத்தை இப்பொழுதே தொடருங்கள்.

நம்மிடையே வாழும் இடையர்கள்:

அது தெருவில் செருப்பு தைப்பவர்களாக இருக்கலாம்.
படிக்க வசதியில்லாத சிறுவனாக இருக்கலாம்.
வேலையில்லாமல் தவிக்கும் இளைஞாக இருக்கலாம்.
மருந்து வாங்குவதற்கு வசதியில்லாமல் இருக்கும் நோயாளியாக இருக்கலாம்.
தேவையில் இருக்கும் பக்கத்து வீட்டாறாக இருக்கலாம்.
அன்புக்காக ஏங்கும் உறவுகளாக இருக்கலாம்.

உங்கள் வழியாக மபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை எதிர்பார்க்கும் இடையர்கள் யார்?
 

Add new comment

1 + 0 =