இது போதுமா?

ஆண்டவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும் - 2 கொரிந்தியர் 12:9. திருத்தூதர் பவுல் உடலில் ஒரு நலக்குறைவினால் பாடுபட்டார். அது அவருக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அப்போது அவர் ஆண்டவரே அதை அவரை விட்டு அகற்றி விடுமாறு ஆண்டவரிடம் கேட்டார். அதற்கு ஆண்டவர்  என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் என் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார்.

திருமுகம் பல எழுதி மக்களுக்கு இயேசுவை பற்றி அறிவித்தவர், பாவ வாழ்வை விட்டு விலகிய பிறகு இயேசுவுக்காகவே வாழ்ந்தவர் அவருக்கும் உடலில் தைத்த முள் போல் வருத்திக் கொண்டே  இருக்கும் அளவுக்கு ஒரு உடல் பலஹீனம் இருந்தது. அன்பு சகோதரமே,  பிரச்சனை, நோய் கடன் தொல்லைகள் இவற்றின் மத்தியில் நாம் கடவுளை இறுக பற்றி கொண்டால் அவருடைய அருளால் நம்மை அரவணைத்து பாதுகாத்து கொள்வார். பொய் சொல்ல அவர் மனிதன் அல்ல. வாக்கு மாறாத கடவுள். என் அருள் உனக்கு போதும் என்று இன்று ஆண்டவர் சொல்கிறார். அவருடைய அருளோடு எழுந்து பிரகாசிப்போம்.

ஜெபம்: ஆண்டவரே எங்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள பிரச்சனைகளால்  அமிழ்ந்து போகிறோம். எழும்ப வலு இல்லை. உம் அருளால் எங்களை நிரப்பும். புத்துயிர் பெற்று. புது பலத்தோடு செயல்பட தூய ஆவியின் ஆற்றலை தாரும். ஆமென்.

Add new comment

11 + 1 =