இது சந்திப்பின் பலம்

இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள் - திருவெளிப்பாடு 3:20. இயேசு கானாவூர் திருமண வீட்டுக்கு சென்றார். அங்கு திராட்சை இரச குறைவை நிறைவாக்கி அவர்களை அந்த சூழ்நிலையில் காத்தார்.

இராயப்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு நோய்வாய்ப்பட்டு இருந்த அவருடைய மாமியாரை குணமாக்கி நோயிலிருந்து விடுதலை கொடுத்தார். ஜெபகூட்ட தலைவன் யாவீரின் வீட்டுக்கு சென்றார். அவருடைய மகள் சிறுமியை சாவினின்று மீட்டு எடுத்தார். இலாசருடைய வீட்டுக்கு சென்றார். இலாசரின் சகோதரி மரியாளை நல்ல பங்கான இயேசுவின் பாதம் அமர்ந்து அவருடைய வசனத்தை கேட்கும் வரத்தை கொடுத்தார். சக்கேயு வீட்டுக்கு சென்றார். இன்றே இவ்வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று என்று பாவ  வாழ்விலிருந்து அவரை மீட்டார்.

சீடர்களோடு மேல் மாடிக்கு  சென்றார். அப்பத்தை பிட்டு அவர்களுக்கு கொடுத்து தன்னையே முழுவதுமாக உலகுக்கு அர்பணித்தார். உயிர்த்தெழுந்த பிறகு சீடர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். உங்களுக்கு சமாதானம் என்று கூறி அவர்களுடைய பயத்திலிருந்து  அவர்களுக்கு தெளிவு கொடுத்தார். 

ஜெபம்: இயேசுவே எங்கள்  வீட்டினுள் வந்து எங்கள் வீட்டிலுள்ள குறைவுகளை நிறைவாக்கும். நோயிருந்து விடுதலை தாரும். மரண படுக்கை மாற்றும். பாதை தெரியாது வாழும் எங்கள் பிள்ளைகளுக்கு பாதை காட்டும். அனைவரும் உமக்குள் வழிநடத்தப்படுவார்களாக. நாங்கள் அனைவரும் உமது மீட்பின் பேரின்பத்தை சுவைக்க வரம் தாரும். ஆமென்.

Add new comment

2 + 8 =