இதுவுமா கடவுளுக்கு பிடிக்கும்?

பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை - திருப்பாடல்கள் 51:16-17. இந்த கிறிஸ்து பிறப்பு காலத்தில் நாம் இயேசுவுக்கு என்ன கொடுக்க போகிறோம். அவர் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார். நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் விலங்குகள், பறவைகளிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படறவற்றை எரி பலியாகச் செலுத்தினார்.

சாலமோன் ராஜா கடவுளுக்கு  இருபத்திரண்டாயிரம் காளைகளையும், ஓர் இலட்சத்து இருபதாயிரம் ஆடுகளையும் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினார். மரியாள் நறுமண தைலத்தை இயேசுவின் பாதத்தில் தடவி தன் கூந்தலால் துடைத்தாள். கிழக்கிலிருந்து வந்த மூன்று ராஜாக்கள் பொன், தூபம், வெள்ளைப் போளம் இவற்றை இயேசுவுக்கு செலுத்தினர்.

அவர் பலியை விரும்பவில்லை. நம் நொருங்குண்ட உள்ளத்தை பரிசாக கொடுப்போமா. அதை தான் இயேசு அதிகமாக விரும்புகிறார். இன்று மட்டும் அல்ல ஒவ்வொரு நாளும் கொடுப்போம்.

ஜெபம்: மனம் வருந்தி அழுகின்ற உள்ளத்தை விரும்புகிற ஆண்டவரே எங்கள் உள்ளத்தை உமக்கு பரிசாக கொடுக்கிறோம். அதை நீர் வாசம் செய்யும் கோவிலாக மாற்றும். அங்கு நீர் பிறந்து எப்பொழுதும் தங்கி இரும். ஆவியின் வழியில் எங்களை வழி நடத்தும். ஆமென்.

Add new comment

4 + 4 =