ஆமா! பயந்தா நமக்கு என்ன கிடைக்கபோது? பாக்கலாமா!

அவர், “வா” என்றதும், பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார் - மத்தேயு 14:29-30. ஆண்டவர் இயேசு வா என்று  கூப்பிட்டதும் பேதுரு கடலில் இறங்கிவிட்டார். அப்போது அவருக்கு கடவுள் கூப்பிடுவது மட்டும் தான் தெரிந்திருந்தது. 

அவர் நடக்க ஆரம்பித்ததும் காற்று வீசுகிறது. பெரிய அலைகள் வருகிறது.  அவரை அசைத்து பார்க்கிறது.   அவர் மூழ்கிற மாதிரி நிலைமை. பேதுரு சூழ்நிலையை பார்க்கிறார். பயந்துவிட்டார்.  ஆண்டவரே என்னை காப்பாற்றும் என்று கத்துகிறார்.

ஆம் நாமும் இதையே தான் செய்கிறோம். ஆண்டவரை நம்பி வருகிறோம். வாழ்க்கையில நோய், கடன், சாவு, துன்பங்கள், தோல்விகள் என அலைகள் வந்து நம்மை புரட்டி எடுக்கும் போது பயந்துட்டு ஆண்டவரே என்னை காப்பாற்றும். ஏன் என்னை கை விட்டு விட்டீர், உம்மை நம்பி வந்தேன் பாரும் என்றெல்லாம் கதருகிறோம்.  அவரை விட்டு தூரம் போகிறோம்.  

ஆண்டவர் நம்மை பார்த்து  அற்ப விசுவாசியே எதுக்கு பயப்படுகிறாய். நான் உன்னோடு இருக்கிறேனே. உன்னை துன்பத்துக்கு உள்ளாக்குவேனா. நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை கைவிடுவதும் இல்லையே என்கிறார். இப்பெயர் பட்ட இறைவனுடன் சேர்ந்து ஜெபிப்போமா!

ஜெபம்: ஆண்டவரே நன்றி. ஒவ்வொரு நொடிப்பொழுதும் எங்களோடு இருப்பவரே உமக்கு நன்றி. எங்கள் கால் கல்லில் இடராதபடி காப்பவரே உமக்கு நன்றி. ஆண்டவரே உம்மை நம்பி நாங்கள் முன்னெடுக்கும் எல்லாவற்றிலும் எங்களோடு இரும். உம்மீது மாறாத நம்பிக்கை வைக்க அருள் தாரும். ஆமென். 

Add new comment

1 + 6 =