ஆபத்து காலத்துல நமக்கு உதவ யார் வருவாங்க? பார்ப்போமா!

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே - திருப்பாடல்கள்  46-1. ஆண்டவர் நமக்கு துன்ப நேரத்தில் உறுதுணையாக இருக்கிறார். நாம் துயருரும் வேளையில் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாக செயல்படுகிறார்.

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர் நெபுகாத்நேசர் அரசர் நிறுவன சிலையை வணங்காது அரசருடைய கட்டளையை மீருக்கின்றனர். எனவே அவர்களை கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப்போடுமாறு தன் படைவீரர்களுக்கு கட்டளையிட்டார். அவ்வாறே அந்த வீரர்கள் அவர்களை மேற்போர்வையோடும் உள்ளாடையோடும் தலைப்பாகையோடும் மற்ற ஆடைகளோடும் சேர்த்துக்கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போட்டார்கள்.

தீச்சூளையில் போடுவதற்குத் தூக்கிச் சென்றவர்களையே அத்தீப்பிழம்பு கூட்டெரித்துக் கொன்றது.மூவரும் கட்டுண்டவர்களாய் எரிகிற தீச்சூளையினுள் வீழ்ந்தார்கள். ஆனால் எல்லோரும் வியப்புரும் அளவுக்கு கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவினார்கள். அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லை. நான்காவது ஆள் தேவ தூதர் போல் இருந்தார். கடவுள் அந்த துன்ப நேரத்தில் அவர்களோடு இருந்து அவர்களை காத்தார்.

ஜெபம்: ஆண்டவரே எங்களுடைய ஆபத்து காலத்தில் எங்கள் துணையாய் இருப்பவரே உமது மேலான பாதுகாப்புக்கு நன்றி. உலகிலுள்ள அனைத்து மக்களையும், எங்கள் நாட்டில் உள்ள அனைத்து மக்களும்  துன்ப காலத்தில் காத்து கொள்ளும். எந்த தீங்கும் ஏற்படாமல் வழிநடத்தும். ஆமென்.

Add new comment

9 + 10 =