ஆதரவு கிடைக்குமா !?!

ஆதரவு தேடுவோருக்கு விடை கிடைக்குமா. நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு - திருப்பாடல்கள் 3:5. ஆண்டவர் நமக்கு ஆதரவு அளிக்கிற கடவுளாய் இருக்கிறார். விதைகளுக்கு ஆதரவும் கைம்பெண்களுக்கு பாதுகாப்பும்  கொடுக்கிறார். அனாதைகளுக்கு ஆதரவு அளிக்கிறார். முதிர் வயதிலும் நம்மை தாங்குகிற கடவுளாய் இருக்கிறார். 

விதவை பெண்களாக நகோமியும் அவருடைய மருமகள் ரூத்தும் மோவாப் நாட்டை விட்டு பெத்லகேம் போகுறாங்க. மோவாப் நாட்டில் நிறைய துன்பங்களை அனுபவிச்சாங்க. நகோமியுடைய கணவர் இறந்தார். அதன்பின் அவருடைய இரு மகன்களும் இறக்கிறாங்க. அன்றாட தேவைகளை சந்திக்கவே ரொம்ப கஷ்டப்பட்டாங்க. எனவே அவங்க இரண்டு பேரும் அப்பத்தின் வீடு என்றழைக்கப்படும் பெத்லகேம் போறாங்க. பொழப்பதற்கு வழி தேடி போறாங்க.

ஆண்டவர் தன்னை நாடி வந்த அவர்களை கண்டுக்காம விட்டு விடவில்லை. அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிற கடவுளாய் இருக்கிறார். வளமான ஆசீர்வாத மான வாழ்க்கையை கொடுக்கிறார். 

ரூத்துக்கு போவாசோடு திருமணம் நடக்கிறது. அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை பார்த்த நகோமி மிகுந்த சந்தோசம் அடைகிறார். 

ஆண்டவர் அவர்களை ஆதரித்தார். உலகம் சார்ந்த சந்தோசம் மட்டுமல்ல. மீட்பின் வரலாற்றிலும் இடம் பெறும் ஆசீர்வாதத்தை கொடுக்கிறார். இயேசுவின் பரம்பரையில் போவாஸ் ரூத்  இருவரும் ஒரு தலைமுறையினர் ஆகிறார்கள்.

ஜெபம்: ஆண்டவரே எங்களுக்கு ஆதரவு அளிக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம். உம்மை புகழுகிறோம். நன்றி கூறுகிறோம். எங்களுக்கு ஆருதலானவரே எங்கள் அடைக்கலமானவரே உம் உம்மை போற்றுகிறோம். உம்மை புகழுகிறோம். நன்றி கூறுகிறோம். உம்மையே ஆதரவாக தேடி வருகிறோம் அப்பா. எங்கள் வாழ்வை வளப்படுத்தியருளும்.  பரலோக பூலோக ஆசீர்வாதங்களை நிரப்பும். 

Add new comment

10 + 8 =