ஆசிர்வாதமென்றால் என்னவாக இருக்கும்

இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார் - லூக்கா 17:21. இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது. இறையாட்சி நீதியுள்ளது. நேர்மையானது. ஏற்றதாழ்வு இல்லாதது. அது எல்லாம் வல்ல தந்தையின் தலைமையில், திருமகன் இயேசுவின் அரவணைப்பில், தூய ஆவியாரின் துணையோடு செயல்படுகிறது.

அங்கு ஏழை பணக்காரன், படித்தவன் படிக்காதவன், மேல் சாதி கீழ் சாதி, ஏமாளி, கோமாளி என்ற பாகுபாடு இருக்காது. அத்தகைய ஆட்சியை எளிய மனதோர்  உரிமையாக்கி கொள்வார்கள். துயருறுவோருக்கு அங்கு ஆறுதல் கிடைக்கும், கனிவுடையோர் உரிமைச் சொத்தாக்கிக்கொள்வர்கள், நீதியில் வேட்கை கொண்டோர்  நிறைவு காண்பார்கள், இரக்கமுடையோர் இரக்கம் பெறுவார்கள், தூய்மையான உள்ளத்தோர் கடவுளைக் முகமுகமாக காண்பர்கள், அமைதி உண்டாக்குபவர்கள் கடவுளின் பிள்ளைகள் என அழைக்கப்படுவர்கள்.

நீதியின் பொருட்டுத் துன்பத்துக்கு ஆளாவோருக்கு  அது உரிமையாகும். இவர்கள் தான் இறை ஆட்சியில் இருப்பார்கள். அது அன்பு, அமைதி, கீழ்படிதல், இரக்கம்,  நீதி, நேர்மை, தூய்மை. இவற்றினால் உண்டான அரசு ஆகும். எனவே இறை ஆட்சி நம்ம கிட்ட தான் இருக்கிறது. 

ஜெபம்: அன்பு ஆண்டவரே நாங்கள் தூய ஆவி அருளும், நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு வாழ விரும்புகிறோம். அதற்கு தடையாக இருக்கும் எல்லாவற்றையும் நீக்கி உம் அன்பின் ஆட்சிக்கு உரிய பிள்ளைகளாக நாங்கள் வாழ துணை செய்யும், ஆசீர்வதியும். ஆமென்.

Add new comment

13 + 0 =