அவர் நம்ம கிட்ட என்ன எதிர்பாக்குறாரு?

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார் - மத்தேயு 1:20. மரியா பரிசுத்த ஆவியால் கருவுற்று இருந்தார். யோசேப்பு மரியாளை மறைவாக விலக்கி விட நினைக்கிறார். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த கடவுள் சும்மா இருக்கவில்லை. 

தூதரை அனுப்பி யோசேப்புக்கு நிகழ்ந்தவை புரிய வைக்கிறார். ஒன்றாவது இறைமகனை தாங்கிய மரியாள் அவமானப்படகூடாது, மரியாவுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என நினைக்கிறார். பூவுலகில் பிறக்கும் இறைமகனுக்கு ஒரு வளர்ப்பு தந்தை வேண்டும் என நினைக்கிறார். நம்மாண்டவர் மீட்பின் திட்டத்தில் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு முன்னேற்பாடோடு செய்கிறார்.

மரியாள் பரிசுத்தமானவர்கள். யோசேப்பு நீதிமான். கடைசிவரை அப்படித்தான் இருந்தார்கள். மரியாளையும் குழந்தை இயேசுவையும் பாதுகாப்பதில் யோசேப்பு அதிக கவனம் செலுத்துகிறார். எச்சரிக்கை வரும்போதெல்லாம் யோசேப்பு விழிப்போடு இருக்கிறார்.

ஜெபம்: ஆண்டவரே உமக்கு நன்றி. நாங்களும் உம் திட்டத்தை அறிந்து கீழ்படிந்து கடைசிவரை உம் வார்த்தையின் படி வாழ வரம் தாரும். ஆமென்.

Add new comment

1 + 0 =