அவரோட வழில நடந்து பார்ப்போமா!!

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! - திருப்பாடல்கள் 128:1. ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய வார்த்தைகளின்படி நடப்பவர்கள் எவ்வளவு பிரச்சனைகள், துன்பங்கள் வந்தாலும் ஆண்டவர் அவர்களோடு இருப்பதால் மிக சமாதானமாக வாழ்வான வாழ்வு வாழ்வார்கள். அவருடைய குடும்பத்தினர் ஆசீர்வதிக்க படுவது மட்டும் அல்ல கீழ்காணும் வாழ்வை அனுபவிப்பார்கள். உழைப்பின் பயனை உண்பார்கள்.  நற்பேறும் நலமும் பெறுவார்கள்.

அவருடைய மனைவி கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார். உண்ணும் இடத்தில் பந்தியை சுற்றிலும் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்போல் சூழ்ந்திருப்பார்கள். ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் ஆசி பெற்றவராய் இருப்பார்கள். ஆண்டவர் சீயோனிலிருந்து ஆசி வழங்குவார்.  அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பார்கள் . நல் வாழ்வு அமையும். 

ஜெபம்: ஆண்டவரே இந்த அதிகாலையில் உம் பாதம் அமர்கிறோம். எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். நீர் அருளும் நல் வாழ்வையும், சமாதானத்தையும்,  நிலையான சந்தோசத்தையும் எங்களுக்கு தந்தருளும். ஆமென்.

Add new comment

2 + 3 =