அமைதிக்கு! இவ்வளவு மதிப்பா?

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள் - லூக்கா 10:5. நம் ஆண்டவர் இயேசு சமாதானத்தை விரும்புகிறார். அவர் தன் சீடர்களை அனுப்பும்போது நீங்கள் எந்த  வீட்டுக்குள் சென்றாலும் முதலில், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என வாழ்த்துங்கள் என்று கூறினார். அவர் உயிர்த்தெழுந்த பின் சீடர்களை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு சமாதானம் உண்டாகுக என்று தான் கூறினார். சமாதானம் செய்வோர்  கடவுளின் மக்கள் ஆவர் என்னும் பேற்றினை  பெறுகின்றனர்.

மேலும் அவர் பலியை அல்ல சமாதானத்தை விரும்புகிறார். அவர் நம்மை பார்த்து 'நீ காணிக்கை செலுத்த வருமுன் உன் சகோதரனுடன் மனத்தாங்கல் இருந்தால் முதலில் போய் சகோதரனோடு  சமாதானம் செய்து விட்டு வந்து பலியை செலுத்து' என்கிறார். நாமும் நம் உள்ளத்திலும் இல்லத்திலும் சமாதானம் உள்ளவர்களாய் வாழ்வோமாக.

ஜெபம்: ஆண்டவரே சமாதானத்தின் கடவுளே, உமக்கு நன்றி. உலகம் தராத சமாதானத்தை எங்களுக்கு தந்து உலகம் முடியும் வரை எங்களோடு இரும். எங்களையும் எங்களை சுற்றி இருப்பவர்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.எங்கள் நாட்டில் சமாதானத்தை கட்டளையிடும். மத மொழி வேறுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ வழி செய்தருளும் .நீர் விட்டு சென்ற அமைதி உலகெங்கும் நிலவ செய்தருளும். ஆமென்.

Add new comment

3 + 2 =