அப்படிச்செய்தால் நடக்காதவையும் நடக்கும்

ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் காற்றையோ மழையையோ காணப்போவதில்லை. ஆயினும் இந்தப்பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். நீங்களும், உங்கள் கால்நடைகளும், விலங்கினங்களும் நீர் அருந்துவீர்கள் - 2 அரசர்கள் 3:17. இஸ்ரயேல் அரசன் யூதாவின் அரசனோடும், ஏதோமின் மன்னனோடும் புறப்பட்டான். அவர்கள் ஏழு நாள் சுற்று வழியில் சென்றபின், படை வீரர்களுக்கும் அவர்களைப் பின் தொடர்ந்த விலங்கினங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

அப்பொழுது இஸ்ரயேலின் அரசன், மோவாபியர் கையில் தாங்கள் ஒப்புவிக்கப்பட்டு விடுவோம் என பயந்து, ஆண்டவரின் விருப்பத்தைத் அறிய விரும்பி  எலிசாவிடம் சென்றனர். அப்பொழுது ஆண்டவர் எலியா மூலமாக நீங்கள் காற்றையோ மழையையோ காணப்போவதில்லை. ஆயினும் இந்தப்பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்றார். அவர்களுக்கு தண்ணீர் கிடைத்ததோடு அவர்கள் மண சமதானத்தோடு சென்றனர்.

ஆம் அன்புக்குரியவர்களே நாம் நடக்கவே நடக்காது என நினைக்கும் காரியம்  ஆண்டவரின் பார்வையில் மிக எளிய காரியம். கால் ஊனமுற்றவரை நடக்க வைக்கவும், பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கொடுக்கவும், செத்தவரை உயிர் பெறச் செய்யவும், முடியாது என நினைக்கும் அனைத்தையும் முடித்து காட்டவும் நம் கடவுளால் முடியும்.   

செபம்: ஆண்டவரே உமக்கு நன்றி. உம்மால் ஆகாதது ஒன்றும் இல்லையே அப்பா. உம்மால் எல்லாம் கூடும். எங்களுடைய வாழ்வில் நாங்கள் எதிர்பார்த்திருக்கும் நன்மைகள் எங்களுக்கு செய்யவும்மல் மட்டுமே முடியும்.  உமது பலத்தோடு எங்கள் வாழ்வை கடந்து செல்ல அருள் தாரும். ஆமென்.

Add new comment

10 + 0 =