Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER
பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள் - மத்தேயு 12:7. நாம் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
வீட்டில் மாமியார் மாமனாருடன் சண்டை போட்டு அவர்களை மனம் நோக செய்துவிட்டு பெற்றோர்களை கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு , நாம் கொடுக்கும் காணிக்கைகள் ஆண்டவருக்கு உகந்ததல்ல என்று ஆண்டவர் கூறுகிறார்.
பிறரிடம் இரக்கம் காட்டுங்கள். நீ காணிக்கை செலுத்தும் முன் உன் சகோதரனிடம் மனத்தாங்கல் இருந்தால் முதலில் போய் உன் சகோதரனிடம் சமாதானம் செய்துவிட்டு வந்து உன் காணிக்கையை செலுத்து . அப்போது உன் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்கிறார்.
சிந்தனை: நாம் நம் உறவுகளிடம் அன்பாக இரக்கத்துடன் நடந்து கொள்கிறோமா? நம் காணிக்கைகள் ஆண்டவருக்கு ஏற்றவையாக உள்ளதா? சிந்திப்போம்.
செபம்: ஆண்டவரே எங்கள் பெற்றோர், உறவுகளை மனநோக செய்த சமயங்களுக்காக மன்னிப்பு கேட்கிறோம். நாங்கள் பிறரை அன்பு செய்வதன் மூலம் உம் அன்பை பெற்றுக்கொள்ள வரம் தாரும்.
Add new comment