அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர் - திருப்பாடல்கள் 138:7. தாவீது ராஜா வாழ்க்கையில் துன்பங்கள் நிறைய. தாவீது போருக்கு சென்ற இடத்திலெல்லாம் வெற்றி பெற்றார். அதை கண்டு சவுல் ராஜா பொறாமைப் பட்டார்.  

எப்படியாவது தாவீதை கொன்று விட நினைக்கிறார். தன் வீட்டு விருந்துக்கு அழைத்து கொல்ல முயற்சிக்கிறார். தன் மகள் மீகாளை திருமணம் செய்து கொடுத்து தாவீதை தன் மருமகனாக்கி கொல்ல முயற்சிக்கிறார். பல வழிகளில் தாவீதை கொல்ல முயற்சிக்கிறார். 

சவுல்சாகும் வரை தாவீது பயந்து பயந்து ஓடி ஒளிகிறார். தாவீது ராஜாவின் துன்ப நேரங்களில் ஆண்டவர் தாவீதின் உயிரை காத்ததோடு அவர் எதிரிகளுக்கு நேராக தன் கரத்தை நீட்டி, தன் வலது கரத்தால் தாவீதை பாதுகாத்தார். எனவே தாவீது அதற்கு நன்றி சொன்ன திருப்பாடல் வசனம் இது.  

ஆண்டவர் தமக்கு பயந்து தன்னையே நம்பி வாழும் எல்லா மனிதர்களுக்கும் தன் வலது கரத்தால் பாதுகாப்பு கொடுத்து உயிரை அழிவினின்று காப்பார். தன் பிள்ளைகள் அழிவை காணவிடமாட்டார். கடவுளுக்கு உண்மையாக நாம் வாழ்ந்தால் ஒருநாளும் நாம் எது கண்டும் பயப்பட தேவையில்லை. 

செபம்: ஆண்டவரே எங்கள் அரணும் கோட்டையுமானவரே எங்களையும் எங்கள் நாட்டையும் பாதுகாத்தருளும். எங்கள் எதிரிகளிடமிருந்து உமது வலது கரம் எங்களை காக்கட்டும், அசீர்வதியும். நன்றி.

Add new comment

3 + 0 =