அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

அடிமை நிலையில் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் ஆண்டவர் வழியாய் விடுதலை பெற்றவர் ஆகிறார். அப்படியே விடுதலை நிலையில் அழைக்கப்பபட்டவர் கிறிஸ்துவின் அடிமையாய் இருக்கிறார் - 1 கொரிந்தியர் 7:22. ஆண்டவர் நம்மை நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை நேசிக்கிற தேவன். அவர் எந்த நிலையிலும் நம்மை அழைப்பார். நம்மை நடத்தி செல்வார். 

திக்கு வாயையுடைய மோயிசனை அழைத்தார். இஸ்ரேல் மக்களை எகிப்தியர் கிட்டயிருந்து விடுவித்து கனானுக்கு வழி நடத்தி செல்லும் பணியில் சிறப்படைய செய்தார். இயேசுவை மறுதலித்த இராயப்பரை அழைத்தார். உன் பெயர் பாறை இந்த பாறையின் மேல் என் திருச்சபையை காட்டுவேன் என கூறி திருச்சபையின் தலைவர் ஆக்கினார்.

கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்த சவுலை அழைத்தார். ஆதி திருச்சபையின் பெரும் பங்கு இவருடையதாக மாறியது. திரு முகங்கள் மூலமாக மக்களை நல்வழிப்படுத்தும் பணி இவர் மீள் விழுந்தது.

ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் அவரை விட்டு ஓடின யோனாவை அழைத்தார்.  நினிவே மக்களின் மனந்திரும்புதல் அவரால் நடந்தது. ஆண்டவர் தகுதி பார்த்து அழைப்பதில்லை. ஆனால் அழைத்த பின் அதற்கு தேவையான தகுதியை தருகிறார். வல்லமையை அளிக்கிறார்.

ஜெபம்: ஆண்டவரே, எங்களை உம் பிள்ளைகளாக அழைத்தவரே, உமக்கு நன்றி. எங்கள் குடும்பத்தில், சமூகத்தில், நாங்கள் செய்யும் இறை பணி, பிறர் பணியில்,  எங்களுக்கு தேவையான தகுதியையும், வல்லமையையும் தாரும். எங்களோடு இரும். உமது பிரசன்னம் எங்களுக்கு முன்பாகப் செல்லட்டும். ஆமென்.

Add new comment

4 + 4 =