அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார் - திருப்பாடல்கள் 40:1. ஆண்டவர் நம்மை அன்பு செய்கிறார். நம்மை அழைக்கிறார். நாம் அவருடைய ஆசீர்வாதத்தை பெறுமுன் நிறைய சோதனைகள் வரும். ஆபிரகாம் வாக்குத்தத்தம் நிறைவேற பல ஆண்டுகள் காத்திருந்தார். 

யோசேப்பு தன்னுடைய கனவு நிறைவேற 13 ஆண்டுகள் காத்திருந்தார். சவுல் ராஜா தன்னை கொன்று விடுவாரோ என்ற பயத்திலிருந்து விடுபட்டு சமாதானமாக வாழ்வு வாழ தாவீது ராஜா காத்திருந்தார். பேயின் பிடியிலிருந்து விடுபட்டு திருமண வாழ்வை அனுபவிக்க தோபியாவின் மனைவி சாரா வருடக் கணக்கில் காத்திருந்தாங்க. இறைமகன் இயேசு  கூட  தன் நற்செய்தி பணிக்காக  30 ஆண்டுகள் காத்திருந்தார்.

முதலில் ஆண்டவருடைய குரலுக்கு கீழ் பணியனும் . அவர் நம்மோடு இருக்கிறார் என்பதை உணரணும். அந்த நாளுக்காக காத்திருக்க வேண்டும். நாம் காத்திருக்கும் அந்த நாட்களில் நிறைய சோதனைகள்  வரலாம். நாம் மாறாமல் அழைத்த அழைப்பில் நிலைத்து இருக்கணும். 

ஜெபம்: ஆண்டவரே எங்கள் அன்பரே உமக்கு நன்றி.  உம் ஆசீர்வாதத்தை காத்திருந்து பெற்று கொள்ளும் பொறுமையையும் வல்லமையையும் எங்களுக்கு தாரும். ஆவியானவர் தானே எங்களுக்கு தேவையான பொறுமை, வல்லமை, அன்பு, சகிக்கும் மனது, எல்லாவற்றையும் தந்து அருள் புரிவார் என நம்புகிறோம். ஆமென்.

Add new comment

9 + 2 =