அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன - எசாயா 49:16. ஆண்டவர் நம்மை உள்ளங்கைகளில் பொரித்து வைத்துள்ளார். வேறு எங்காவது எழுதி வைத்திருந்தால் நாம் அவரது பார்வையிலிருந்து தப்பி விடுவோம். அவர் நம் மீது கொண்ட அன்பினால் எப்பொழுதும் நாம் அவர் பார்வையில்  இருக்கும் பொருட்டு நம்மை தன் உள்ளங்கைகளில் எழுதி வைத்துள்ளார்.  

நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார். பூமியின் கண் காணாத் தூரங்களில், கடை எல்லைகளில் நாம் போய் தங்கினாலும் அவர் கண்கள் நம்மை பார்த்து  கொண்டு இருக்கிறது. அப்படி நம்மை நினைவு கூறுகிற தேவனாய் இருக்கிறார். அவர் நம்மை மறப்பதே  இல்லை. நாம் கருவில் உருவாகும் முன்பே நம்மை பெயர் சொல்லி அழைத்தவர்.  நாம் கருவில் உருவாகும் முன்பே நம்மை முன் குறித்த இறைவன்.

ஜெபம்: ஆண்டவரே எங்களை உள்ளங்கைகளில் பதித்து வைத்திருப்பவரே, காலை தோறும்  எங்களை எழுப்பி எங்களுக்கு புது ஸ்வாசத்தை தருபவரே, உமக்கு நன்றி. இன்றைய நாளையும் எம் வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும் நண்மையால் நிரப்பும். கோட்டையாக அரணாக அனுகூலமான துணையாக இருந்து காத்தருளும். ஆமென்.

Add new comment

8 + 10 =