அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

ஆண்டவரே, வானத்தைவிட உமது மாட்சி பெரிது . கடல் ஆழத்தை விட உமது அன்பு ஆழமானது. தாயின்  அரவணைப்பைப் விட உமது பாதுகாப்பு உறுதியானது. உமக்கு நன்றி ஆண்டவரே. ஆண்டவரே இரவு முழுவதும் எங்களோடு இருந்து இரவின் பயங்கரத்திற்கு எங்களை விலக்கி பாதுகாத்ததற்காக நன்றி. காலையிலே எங்களை எழுப்பி இந்நாளின் மகிமையை நாங்கள் காணச் செய்த உமது அன்புக்கு நன்றி.  

இன்றைய நாளின் எல்லா வேளைகளிலும் எங்களோடு இரும். நாங்கள் பிறரிடம் அன்பை பெறுவதை விட அன்பை கொடுக்கவும், உதவி பெறுவதை விட பிறருக்கு உதவி செய்யவும், மன்னிப்பை பெறுவதை விட பிறரை மன்னிக்கவும் எங்களுக்கு  அருள் தாரும். நாங்கள் பிறருக்கு செய்வதன் மூலம் உம்மை பிரதிபலிக்க அருள் தாரும் ஆண்டவரே.

எங்களையும் எங்கள் உறவுகள் நண்பர்கள் அனைவரையும்  மேலே வானுக்குறிய ஆசிர்வாத்த்தாலும் கீழே பூமிக்குரிய  ஆசிர்வாதத்தாலும் நிரப்பும்.  எங்கள் நாட்டை வளங்களால் நிரப்பும். உலகில் எங்கும் சமாதானம் நிலவச் செய்யும். 

கடவுளே, வீணை ஒலியை விட இனிமையான, தென்றலை விட சுகமான, வண்டுகள் மொய்க்கின்ற பூக்கள் நிறைந்த குளத்தை விட அழகான, இரவு நேர நிலவை விட குளிர்ச்சியான, உம் பாத அடிகளை வணங்கி தொழுது வணங்குகின்றேன்.  ஆசீர்வதியும். வழிநடத்தும்.

Add new comment

1 + 5 =