அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல - யாக்கோபு 1:17. நம் ஆண்டவர் கொடைகளின் இருப்பிடம்.நாம் அவரை நோக்கி கூப்பிடும் போதெல்லாம் அவர் நமக்கு தர வல்லவராயிருக்கிறார். 

ஆபிரகாம் குழந்தைய கேட்டார். நாடுகளை ஆளும் ராஜாக்கள் கூட அவருடைய சந்ததியில் தோன்றும் அளவுக்கு சந்ததியை கொடுத்தார். சாலமோன் ஞானம் கேட்டார். உலகில் சாலமோனுக்கு நிகரான ஞானத்தில் அதற்குமுன்பும் பின்பும் யாரும் இருந்ததில்லை. அந்த அளவு ஞானத்தை நிறைவாக கொடுத்தார்.

சீடர்கள் மீன் பிடிக்கும் போது ஏதோ கொஞ்சம் மீன் கிடைத்தால் நல்லாயிருக்குமென்று எண்ணினர். ஆனால் ஆண்டவர் வலை கிழியும் அளவுக்கு நிறைய மீன்களை கொடுத்தார். 

இப்படி நாம் கேட்பதற்கும் அதிகமாக கொடுக்கிற தேவன். அவர் என்றும் மாறாதவர். அன்பே உருவானவர். அவர் வரங்களை பொழிபவர். வல்லமையை தருபவர். அவர் ஒளியாக இருக்கிறார். அவரிடமிருந்தே எல்லா வரங்களும் கொடைகளும் வருகின்றன.  

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, ஒளியாக இருப்பவரே உம்மை துதிக்கிறோம். வரங்களை மழையாய் பொழிபவரே உம்மை வணங்குகிறோம். நாங்கள் உம்மையே நோக்கி பார்க்கிறோம் ஆண்டவரே. பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எங்கள் கண்கள் உம்மையே நோக்கியிருக்கிறது. இந்த காலையில் எங்களுக்கு இரக்கம் காட்டும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

7 + 13 =