அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

உன் தந்தையின் இறைவனே உனக்குத் துணையிருப்பார்; எல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்; மேலே வானத்தினின்று வரும் ஆசியாலும் கீழே ஆழத்தினின்று வரும் ஆசியாலும் கொங்கைகளுக்கும் கருப்பைகளுக்கும் உரிய ஆசியாலும் அவர் உனக்கு ஆசி வழங்குவார் - தொடக்க நூல் 49:25. நம்முடைய ஆண்டவர் நமக்கு துணையாக வருகிறவர். அவர் நமக்கு நிறைவான ஆசீர் அருளுகிற தெய்வம். 

அவர் மேலே பரலோகத்தில் இருந்து வருகிற அனைத்து ஆசீர்வாதத்தினாலும் கீழே பூமியிலுள்ள அனைத்து ஆசீர்வாதத்தினாலும் கர்ப்பத்தின் கனிகளாலும் நம்மை நிறைவாக ஆசீவதிக்கிற இறைவன். வான் மழை கொடுத்து பூமியின் விளைச்சலை கொடுத்து நம்மை மகிழ்விக்கிறவர். 

நமக்கு எந்த குறையும் வர விடமாட்டார். நாம் மறந்தாலும் நம்மை கண்காணித்து கொண்டிருக்கிற பாசமுள்ள தந்தை.  அவருக்கு தெரியும் அவர் பிள்ளையை எப்படி ஆசீர்வதிக்க வேண்டும் என்று. கண்டிப்பா அவமானப்பட விடமாட்டார். அழிவு காண விடமாட்டார். 

நிறைந்த சமாதானத்தை தருவார். நிம்மதி தருவார். நம் மீது கண் வைத்து நமக்கு ஆலோசனை தருகிறார். நாம் தள்ளாட விடமாட்டார். 

ஜெபம்: ஆண்டவரே இந்த காலை வேளையிலே உம் திருப்பாதம் நாடி வந்துள்ளோம்  உம் கிருபையினால் எங்களை நிரப்பும். உமது அன்பை நாங்கள் காலை தோறும் காண பண்ணும். உம் இரக்கத்தை நாள் முழுதும் அனுபவிக்க பண்ணும். நன்றி யேசுவே. ஆமென்.

Add new comment

10 + 3 =