அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி, “உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா?” என்றார் - நீதீத் தலைவர்கள் 6:14. இஸ்ரேல் மக்கள் கடவுளை மறந்து பாகாலை வழிபட ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் தான் யோவாசின் மகன் கிதியோனுக்கு ஆண்டவரின் தூதர்  தோன்றி  வலிமை மிக்க வீரனே, ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்  என்றார்.

கிதியோன் அவருக்கு பதிலாக  ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுது. ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்ததாக  எங்கள் தந்தையர் எங்களுக்கு சொன்ன வியத்தகு செயல்களெல்லாம் எங்கே?  இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்? எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்துவிட்டாரே  என்றார்.

அதற்கு ஆண்டவர் உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா  என்றார். கிதியோன் அவரிடம்,  என் ஆண்டவரே  நான் எப்படி இதை செய்வேன் மனாசேயிலேயே நலிவுற்று இருப்பது என் குடும்பம். என் தந்தை வீட்டிலேயே நான்தான் சிறியவன் என்றார்.

ஆண்டவர் நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஒரு ஆளாக மிதியானியரை வெல்வாய்  அஞ்சாதே  என்றார். சொன்ன படியே ஆண்டவர் அவரோடு இருந்து வழி நடத்தினார். கிதியோன் மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை விடுவித்தார்.

நாம் ஆண்டவருக்கு ஏற்றபடி நடந்து நம் பலவீனத்தை ஒப்புக்கொண்டால் அவர் நம்மோடு இருந்து நம்மை  வழிநடத்தி நம் எதிரிகளை மேற்கொள்ள தோற்கடிக்க பலம் தருவார்.  நாம் இப்போது இருக்கும் தோல்விகளை துன்பங்களை விரக்திகளை மாற்றி நலமானதை நமக்கு தருவார்.

ஜெபம்: ஆண்டவரே, எங்கள் நல்ல தந்தையே நாங்கள் உம்மை துதிக்கிறோம். எங்களை காத்து கொள்ளும் .ஆண்டவரே காலை முதல் நாள் முழுவதும் எங்களோடு இரும். எங்களுக்கு எதிராக எழும்பும் தீய சக்திகளை மேற்கொள்ள அருள் தாரும். எங்களோடு வருபவர் நீர் என்ற பலத்தோடு நாங்கள் எங்கள் முன்னெடுப்புகளை தொடர அருள் தரும். ஆமென்.

Add new comment

5 + 1 =