அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

வர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;

 

திருப்பாடல்கள்   111:5

கடவுள் வானாந்தர பாதையிலே இஸ்ரவேல் மக்களுக்கு அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்து அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். காடைகளை வரசெய்து அவர்களின் ஆசையை நிறைவேற்றுகிறார். பாறை தண்ணீரும் கொடுத்து அவர்களின் தாகத்தையும் போக்குகிறார். அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை காப்பாற்றுகிறார்.

இதே கடவுள் மழையில்லாது பஞ்சம் நிலவிய காலத்தில்   எலியாவுக்கு காகத்தின் மூலம் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் கொடுத்து காக்கிறார். அருகே ஓடையில் தண்ணீரை காட்டி எலியாவின் தாகத்தை தீர்க்கிறார்.  ஆண்டவர் அவருக்கு அஞ்சி நடபவர்களுக்கு உணவளிகிறார்.

இந்த இரு நிகழ்ச்சிகளையும் சற்று சிந்திப்போம்.  

காகம் அதுக்கு அப்பமும் இறைச்சியும் கிடைத்தால் அது சாப்பிடாமல் எப்படி கொண்டு வந்து கொடுத்தது. வனாந்தர பாதையிலே எங்கிருந்து மன்னாவும் காடைகளும் வந்தன. 

அதுதான் நம் இறைவன். ஒவ்வொரு நாளும் தன் பிள்ளைகளுக்கு போசிகிறவர்.  பட்டினி போட விடமாட்டார். தன் பிள்ளை பசியோடு இருக்க விடமாட்டார்.  அன்றன்று உள்ள உணவை அன்றாடம் தருவார். 

ஜெபம்: ஆண்டவரே உமக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு உணவு கொடுத்து காப்பவரே உமக்கு நன்றி.  இந்த உலகத்தில் பசியால் பஞ்சத்தால் வாடும் பிள்ளைகளை சந்தித்து அவர்களுக்கு உணவு கொடும் ஆண்டவரே. அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்பட மனித கண்களில் தயவு கிடைக்கப் பண்ணும். எங்கள் உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும், உணவு ஒவ்வாமை பிரச்சனை இருப்போரையும் காத்து வழி நடத்தும். ஆமென்.

Add new comment

4 + 14 =